Tag: #agathiyar
-
அகத்தியன் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’ என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்குப் பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர். தென் திசைக்கு வந்த அகத்தியன், பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். இராமபிரானுக்குச் சிவகீதையை…