Tag: #accident
-
கோவை நகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைந்து உள்ளது. கோவை நகரில் மிக முக்கிய இணைப்பு பாலமாக இது உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கேஸ் குடோனுக்கு எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பாலத்தில் சென்று கொண்டு இருந்த பொழுது திடீரென…
-
கோவை சுந்தராபுரம் – எல்.ஐ.சி காலனி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு லாரியில் ஏற்றி செல்லப்பட்ட இரும்பு மெஷின் மெட்டீரியல் உருண்டை நடுரோட்டில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஏற்றி சென்ற மிஷின் மெட்டீரியல் நடுரோட்டில் விழுந்ததால் கார் சேதம் -எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எல் அண்ட் டி நிறுவனத்திலிருந்து லேத் கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றி அனுப்பி உள்ளனர். பாதுகாப்பில்லாமல்…
-
உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சிறுவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் விதமாக ரூ.481 கோடி செலவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப்பாலம்…
-
கோவையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் தறிகெட்டு ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் வழியாக கணுவாய் செல்லும் தனியார் பேருந்து புதன்கிழமை அதிகாலை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பேருந்து காவல் துறை சார்பில் அங்கு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறி பயணிகள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக கார்த்திக் என்பவருக்கு காலிலும்,முருகேசன்…
-
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் கொண்டை ஊசி வளைவில் உள்ள பாறையில் மோதி விபத்திற்கு உள்ளானதில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). இவரது ஏற்பாட்டில் 13 குழந்தைகள் உட்பட 31 பேர் கொண்ட குழுவினர் கேரளாவிற்கு சுற்றுலா புறப்பட்டனர், அங்கிருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் அங்கே சுற்றி பார்த்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.தினேஷ் ( வயது 25) என்பவர்…
-
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 9ம் தேதி நடந்த சாலை விபத்தில் 3 வயது குழந்தை மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார்(32). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கடந்த 9ம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனம்…
-
திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, தி.மு.கவை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்…