தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையின் கீழ், எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மொத்த 6.41 கோடி வாக்காளர்களில், 6.23 கோடி பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணக்கீட்டுப் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை பிஎல்ஓ-களிடம் அல்லது அருகிலுள்ள வாக்காளர் உதவி மையங்களில் சமர்ப்பிக்கலாம்.



Leave a Reply