GKNM ¡OP ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் ‘மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்’ என்ற சாதனையை படைத்துள்ளது.
கோயம்புத்தூர், ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி & வெளிநோயாளி மையம் (GKNM iOP) ‘மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்’ என்ற சாதனையை படைத்துள்ளது. ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், சர்வதேச பதிவுகளின் (IPR) படி நிகழ்வை நடத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் வெளியிட்டிருந்தது. அதன்படி, 22 ஜூன் 2024 அன்று ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்களின்படி, மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, ‘GKMH மருத்துவ ஆராய்ச்சி & வெளிநோயாளி மையம் (GKNM iOP)’ ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2025 பதிப்பில் வெற்றிகரமாக பதிவேறியது. இதனை உறுதி செய்த, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றாளர், திரு. விவேக் ஆர் நாயர், GKNM மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசுவாமியிடம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின், ‘மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்’ என்ற சான்றிதழை வழங்கினார்.
3.3 லட்சம் சதுர அடியில், 2.39 ஏக்கரில், ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையமாக அமைந்துள்ள, GKNM iOP, 30 மருத்துவத் துறைகள் மற்றும் 200 அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டுள்ளது. 8 தளங்கள் (தரை + 5 தளங்கள் மற்றும் 2 அடித்தளங்களுடன்), GKNM iOP, நோய் கண்டறிதல், அவசர சிகிச்சை மற்றும் பகல்நேர பராமரிப்பு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குகிறது. ஜூன் 22, 2024 அன்று உறுதிசெய்யப்பட்டபடி யோகா மற்றும் அக்குபஞ்சர், 24/7 மருந்தகம் மற்றும் ஹோம் ஹெல்த் சேவைகள் ஆகிய
சேவைகளும் அடங்கும்.
Leave a Reply