Category: Madurai

  • கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்-  கோவை மாவட்ட ஆட்சியர்

    கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா்  என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித்…

  • தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் : கடை வாடகையில் ஒரு தலை பட்சம் 

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  வணிக வளாகம் கட்டப்பட்டது. 29  கடைகளாக உள்ள அந்த வளாகத்தினை  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்காக ஓபன் ஏலம் விடப்பட்டது.இதில் வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கூறியதால்,26 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடைகளின் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. பேரூராட்சிக்கு வருமானம் வரும் என்பதால், பேரூராட்சி நிர்வாகம் இந்த…

  • கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் வெளியீடு

    தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்கிறது. இணைய தளம் வாயிலாகவோ அல்லது சம்மந்தப்பட்ட இணைப் பதிவாளர்களையோ தொடர்பு கொண்டு கரும்பு விவசாயிகள் பயன் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்…

  • கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா

    கோவை சுந்தராபுரத்தில் கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர்  கராத்தே விஜூ தலைமையில் நடைபெற்ற கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஜெரால்ட்,  குனியமுத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் செல்வ பாண்டியன்,  வக்கீல் ப்ரீத்தி, தலைமை காவலர் ஆறுமுகம், தாய் டிவி நிறுவனர் கோபால், அகாடமி தலைவர் காளியப்பன்,சிலம்ப ஆசான் கேசி.ஆ.சிவக்குமார்…

  • தமிழ் மொழி குறித்து ஆவணப்படம் உருவாக்கும் அமெரிக்கர்  அண்ணாமலையுடன் சந்திப்பு

    தமிழ் மொழி குறித்து ஆவணப்படம் உருவாக்கும் அமெரிக்கர்  அண்ணாமலையுடன் சந்திப்பு தமிழ் மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை விவரிக்கும் ஆவணப்படத்தை உருவாக்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த பிரையன் லைன்பாக் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது , ” இன்று பாஜக அலுவலகத்தில்  பிரையன் லைன்பாக்கை சந்தித்த பிறகு நான் ஈர்க்கப்பட்டேன். பிரையன் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், அவர் 19 வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருந்தார்,…

  • தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிப்பு??

    தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிப்பு?? தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்க்ரப் டைபஸ் என்கிற ஒருவகை பாக்டீரியா தொற்று தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. தினமும் 10 முதல் 20 பேர் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை…

  • குழந்தை உயிரை குடித்த செப்டிக் டேங்க்..!  விக்கிரவாண்டி பள்ளியில் நடந்தது என்ன?

    * பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்..! விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உள்ளே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தி இருக்கிறது.  குழந்தையை பள்ளி நிர்வாகமே மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியின் மூன்று…

  • பதற வைத்த டேங்கர் லாரி விபத்து.

    கோவையில் 8 மணி நேரம் திக் திக்..! பதற வைத்த டேங்கர் லாரி விபத்து… எப்போதும் பதற்றத்திலும் பரபரப்பிலும் இருக்கும் கோவையை மேலும் ஒரு பீதிக்கு உள்ளாக்கியது சில தினங்களுக்கு முன்பு நடந்த கேஸ் டேங்கர் லாரி விபத்து.  அடுத்து என்ன நடக்குமோ என கோவைவாசிகள் பதற்றத்தில் இருக்க, ஒருவழியாக பாதுகாப்பாக மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகே  அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கேரள மாநிலம், கொச்சியில் இருந்து,  கோவை நகரப் பகுதியான பீளமேட்டில் உள்ள பாரத்…

  • 3வது நாள் எப்ப வருவாரோ

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக சொற்பொழி நிகழ்ச்சி கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. 3வது நாளான இன்று இசைக்கவி ரமணன்  ராம நாமம் பற்றி மகான் பத்ராசல ராமதாசர் குறித்து பேசினார். #TheKovaiHerald#எப்போவருவரோ#ska#எப்போவருவரோ#photostory#SriKrishnaSweetsPrivateLtd#speech#devotion#CoimbatoreNews#kovai#tkhnews#tkh#heraldnews#cbeherald

  • ​மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால்​ நட்ட அமைச்சர் பி.மூர்த்தி

    தமிழக​ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,மதுரை​  மாவட்டம், அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் .​ மாவட்ட​ ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர்  பி .கே .அரவிந்த் ,​ உதவி ஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர்  சக்திவேல்  ஆகியோர் உடன் உள்ளனர்.