Category: special

  • கோவையில் ரன் ஃபார் கேன்சர் சீசன் 2* எனும் தலைப்பில் நடைபெற்ற கேன்சர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

  • கெட் அவுட் ஸ்டாலின் … 10 லட்சம் பேர் பதிவு செய்ததாக செய்ததாக அண்ணாமலை பெருமிதம்

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேப் மோடி என சொல்ல மாட்டார்கள் கெட் அவுட் மோடி என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. தொடர்ந்து, திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை, பாரதிய ஜனதா…

  • சினிமா ரசிகர்களே தியேட்ரில் விளம்பரம் போட்டு கடுப்பு ஏத்துறாங்களா? இந்த செய்தி உங்களுக்குதான்.

      அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் பிவிஆர் ஐனோக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, அந்த நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் டிசம்பர் 26, 2023 அன்று பி.வி.ஆர்.மற்றும் ஐனாக்ஸ் தியேட்டரிர் மாலை 4.05 மணிக்கு ‘சாம் பகதூர்’ திரைப்படத்திற்கு மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து படம் பார்க்க சென்றுள்ளார். படம் மாலை 6.30 மணிக்கு…

  • என்னதான் பிரச்னை: டைரக்டர் சங்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை?

    ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…

  • Untitled post 7820

    ஈஷா மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 25 அன்று நடக்க உள்ளது,சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார், மேலும் சத்குரு நள்ளிரவு மகா மந்திர தீட்சை வழங்க உள்ளார்.

  • தவளைக்கு ‘டைட்டானிக்’ நடிகர் பெயர்… – பாவம் மனுஷன்…!

      ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம். இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது. தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல்…

  • பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்… – எப்போது நாடு திரும்புவார்கள்?

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதில் சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் உதவி கோரிய அவர்கள்,…

  • Establishment of Centre of Excellence in Smart E-Mobility and Skill Development at SRIT

    Sri Ramakrishna Institute of Technology (SRIT), Pachapalayam, Coimbatore, marked a significant milestone with the establishment of the Centre of Excellence (CoE) in Smart E-Mobility and Skill Development (SEMS). This initiative, jointly undertaken by the Department of Mechanical Engineering and the Department of Electrical and Electronics Engineering, aims to foster research, innovation, and skill development in…

  • கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – 7 பேர் கைது

    கோவையில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பாட்டி உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் சிறுமி வீட்டிற்கு திரும்பிய பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. ​சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்ட கல்லூரி மாணவர்கள், சிறுமியை குனியமுத்தூரில்…

  • கோவையில் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு, சில குடியிருப்பு வாசிகள் விஷம் கலந்த உணவு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களைத் துரத்தியும், கடித்தும் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொல்லையைத் தடுக்க, சில குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட நாய்களுக்கு…