Category: college
-
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், டாக்டர்.ஆர்.வி. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலருமான திரு.சுந்தர் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.என்.ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்று கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். போர்டு இயக்குநர் மற்றும் குளோபல் சி.எக்ஸ்.ஓ., ஜி.சி.சி. நிபுணர், டிஜிட்டல் மாற்ற தலைவர், ஸ்டார்ட் அப் வழிகாட்டியுமான திரு.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.…