பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு அஸ்விதா என்ற இரண்டு மகள்களில் மூத்தவர். அஸ்விதா கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கியிருந்து, பின்னர் உடுமலை சாலைக்கு அருகே குடிபெயர்ந்திருந்த நிதி நிறுவன ஊழியர் பிரவீன், அஸ்விதாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
சமீபத்தில், அஸ்விதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த பிரவீன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின், திங்கட்கிழமை அவர் நேரடியாக மாணவியின் வீட்டுக்குச் சென்று, கத்தியால் பலத்த காயங்களுடன் தாக்கினார். சம்பவ இடத்திலேயே மாணவி மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தவர்கள் உடனே அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளது.
சம்பவம் குறித்து ஏஎஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, பிரவீன் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம் பகுதி முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply