மின் மயானத்தில் மேற்கூறை நீர் கசிவு – ஆய்வு செய்த எம் எல் ஏ கே.ஆர்.ஜெயராம்

Spread the love

கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் மின் மயானம் மேற்கூரைகள் பராமரிப்பு இன்றி, கடந்த ஒரு வருட காலமாக நீர் கசிவுகள் ஏற்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் சாதனங்கள் மற்றும் எரியூட்டு கருவிகள் மீதும் மழைநீர் விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.  இது தொடர்பாக சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே ஆர் ஜெயராமிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர் . இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் நேரில் சென்று ஆய்வு செய்து இதற்கான பணிகளை கோவை மாநகராட்சி ஆணையரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர்கள் எடுக்கவில்லை என்றால் சட்டமன்ற நிதியிலிருந்து அதற்கான பணியை தொடங்குவேன் என்றார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், ஆர் எஸ் திருமுகம் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்