திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் அந்த உண்மையை ஏற்கலாம். ஆனால் வரலாறு இதுதான். எதிர்க்கட்சிகள் ஆளுக்கு ஒரு திசையில் சிதறிக் கிடக்கின்றனர். கூட்டணியில் இருந்தாலும் அதிமுக-பாஜக இடையில் நல்ல உறவு இல்லை. திமுக கூட்டணி வலுவாக உள்ளதை நயினார் நாகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே ஒரு கூட்டணி மட்டும் தான் உள்ளது என்பதை நயினார் நாகேந்திரனே ஒப்புக்கொண்டிருக்கிறார் ” என்றார்.
அதிமுக-பாஜக இடையில் நல்ல உறவு இல்லை – திருமாவளவன் பேட்டி

Leave a Reply