கோவையில் இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி மட்டுமின்றி பிளாஸ்டிக் கழிவுகள், புழுக்கள்

Spread the love
கோவை, மருதமலை அடிவாரத்தில் கடந்த நான்கு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

யானையின் பிரேதப் பரிசோதனையில் அதன் வயிற்றில் 15 மாத கருவுடன், பிளாஸ்டிக் கழிவுகளும் புழுக்களும் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வனத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

கடந்த மே 17 – ம் தேதி பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில், தனது குட்டியுடன் மயங்கி விழுந்த தாய் யானைக்கு வனத் துறையினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் பெல்ட்டால் தூக்கி நிறுத்தப்பட்டு, தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார், மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகியோர் சிகிச்சையை மேற்பார்வையிட்டனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. அதன் உடற்கூறு ஆய்வில், யானையின் வயிற்றில் 15 மாத வளர்ச்சி அடைந்த குட்டி இருந்ததும், அத்துடன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளும், புழுக்களும் இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.