கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஒப்பந்த நிறுவனம் பணியில் சேர்ந்த பின்னர், பணியாளர்களுக்கு சம்பளம், வேலை நேரம், மருத்துவ நலன்கள் போன்ற தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், வெளி மாநிலங்களிலிருந்து மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக ஆட்கள் அழைத்து வரப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர்.
அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர்.
பணியாளர்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்கனவே கேட்டறிந்தாலும், இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே இந்தப் போராட்டத்தின் பின்புலமாகும்.
Leave a Reply