தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வி பயணத்தைத் தொடங்க தயாராகி வருகின்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள சூழலில், மாணவர்கள் தற்போது மேல்கல்வி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
எந்த பாடத்தை தேர்வு செய்வது, எந்த கல்வி நிறுவனத்தில் சேருவது என்பதை முடிவு செய்யும் முயற்சியில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முதல் கட்டமான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 வரை நடைபெறும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
மே மாத முதல் வாரத்தில் பதிவு தொடங்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதன் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொறியியல் படிப்பு தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களும் பெற்றோர்களும் தேவையான ஆவணங்கள், தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விருப்பப்பட்ட கல்லூரிகள் குறித்தத் தகவல்களைத் திரட்டி தயாராகின்றனர்.
பொறியியல் கல்விக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால், மாணவர்கள் இணையதளத்தில் தங்களை நேரத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கலந்தாய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply