, , ,

கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்

coimbatore airport
Spread the love

கோவை சர்வதேச விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளுடன் பல்வேறு பயணிகளுக்கு முக்கிய அணுகுமுறையாக உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, சீரடி, கோவா ஆகிய உள்நாட்டு இடங்களுக்கும், சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப் படுகின்றன. தினசரி 10,000 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பயணிகள் எண்ணிக்கை யின் தொடர்ந்து அதிகரிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன.
விமான நிலைய முனைய
கட்டிடம் ரூ.68 லட்சம் செலவில் மாற்றி யமைக்கப்பட உள்ளது. கோவை, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகர மாக வளரும் வேகத்தில் இருக்கும்போது, இதற் கேற்ப விமான நிலைய வசதிகள் இன்னும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான பணி
கள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு 10.92 லட்சம் பயணிகள், 6,780 மெட்ரிக் டன் சரக்குகள் என்ற நிலையில் இருந்த கோவை விமான நிலையம் 2024 ஆம் ஆண்டில் 27.71 லட்சம் பயணிகள், 10,571 மெட்ரிக் டன் சரக்குகள்.ஆக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி 2025க்குள் 50 லட்சம் பயணிகளை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, விமான நிலை
யத்தின் விரிவாக்கத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு பயனளிக்கும்படி 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. விமான நிலைய ஆணையம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த தால் காத்திருப்பு பகுதி விரிவுபடுத்தப்படும். பாதுகாப்பு சோதனை பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஏப்ரல் 2, மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் 9 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நிலையில், விரிவாக் கம் மேற்கொள்ளப்படுவது பயணிகள் வசதிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக் காகவும் அவசியமானது.
விரிவாக்கம் முழுமை யாக நிறைவு பெற்றால், பெரிய விமானங்களும், பன்னாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்படும் என்பதால், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் பெரும் பயனாக அமையும்.