, , , ,

​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு​ பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனையாளர் விருது

kalam awards
Spread the love

கலாம் வேர்ல்டு ரெக்கார்டஸ் அமைப்பு சார்பில், மகளிர் தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் பெண்களுக்கு 13-வது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை தரமணியில் உள்ள டீச் கலையரங்கில் மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது.
அதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவியும், சமையல் கலைஞருமான டி.எப். சமீமாவுக்கு, “பெண்களுக்கு ஊக்குமளிக்கும் சாதனையாளர்” என்ற விருது வழங்கப்பட்டது.
சமையல் கலையில் சாதனை படைத்து வரும் இவர், ஃபுட் ஹோட்டல் ஆசியா சார்பில், சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சமையல் கலைப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்று இவர் சாதனைப் படைத்தார்.
இதேபோல் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம், இந்திய சமையல் கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற சமையல் கலைப்போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் மெரிட் சான்றிதழ் பெற்று சாதனைப் படைத்தார்.
கின்னஸ் உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சியில், ஒரு நிமிடத்தில் 42 கப் கேக் அலங்காரம் செய்து சாதனை புரிந்தார். பெங்களூருவில் உள்ள இராணுவ உணவு விடுதி மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற, தேசிய அளவிலான விருந்தோம்பல் போட்டியில், வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, “பெஸ்ட் பேக்கர் ஆஃப் தி இயர் 2024” என்ற விருதை பெற்றார்.
மாணவி டி.எப். சமீமாவின் இச்சாதனைகளைக் கருத்தில் கொண்டு, கலாம் வேர்ல்டு ரெக்கார்டஸ் அமைப்பு, “பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனையாளர்” என்ற இவ்விருதை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற மாணவியை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் வெகுவாகப் பாராட்டினார். இதேபோல் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.