- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ)
நிகழ்ச்சி
கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி நடைபெற்றது.
ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் நடைபெற்ற பேஷன் டெஸ்ட் 2025 இந்நிகழ்ச்சியில் 5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
120 க்கும் மேற்பட்ட டிசைனர்கள் இதில் பங்கு பெற்றனர். 130 க்கும் மேற்பட்ட ஆடை அலங்காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, 40 வகையான போட்டிகள் நடைபெற்றது. மேலும் முன்னணி நடன இயக்குனர்கள் இதில் பங்கு பெற்றனர். 40 க்கும் மேற்பட்ட அலங்கார நிபுணர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட் இயக்குனர் திருமதி. சுகுணா ஏற்பாடு செய்திருந்தார். இப் போட்டியில் பெண்கள் ஒய்யாரமாக நடந்து வந்தது அனைவரின் மனதையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Leave a Reply