கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது..
சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர் மருத்துவமனை தற்போது இந்தியாவில் முதன் முறையாக ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கை நடத்தி உள்ளது.
ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இதற்கான துவக்க விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
ராயல் கேர் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இதில், உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொரியா,ஸ்பெயின்,பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்..
இதில் ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறை குறித்து பல்வேறு விளக்க உரைகளுடன் நேரடியாக சிகிச்சை மேற்கொள்வதும் காணொலி வாயிலாக ஒளிபரப்பி எடுத்து கூறப்பட்டது..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், கத்தியின்றி இரத்தம் வராமல் அறுவை சிகிச்சை செய்யும் உலகின் அதிநவீன சிகிச்சையாக இந்த சிகிச்சை முறையை மேற்கொள்வதாகவும், இது குறித்து மருத்துவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த கருத்தரங்கம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்..
பார்கின்சன் நோய் எனப்படும் நரம்பியல் சார்ந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்…
இந்த சந்திப்பின் போது, மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில் குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. ரகுராஜ பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் ஆர். செந்தில்குமார்,ராஜ்குமார்,கனகராஜூ, விஜயன்,அருள் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply