, ,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் சினர்ஜி 2025

Synergy Collaboration
Spread the love

கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி 2025 எனப்படும் இண்டஸ்ட்ரி டே கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களிலிருந்து வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் சிந்தனை, படை ப்பாற்றல் மற்றும் வேலைவாய்ப்புக்கான முழுமையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை அசெஞ்சர் நிறுவனத்தின் ஹெல்த் பிசினஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிரிவின் துணைத்தலைவர் ஜி.ஹரிப்பிரகாஷ் அவர்கள் தொடங்கிவைத்தார்.
தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் துறைகள் பற்றிய குழு விவாதம், மாணவிகளின் செய ல்திட்டங்களைத் தொழில்துறையைச் சார்ந்தவர்கள் மதிப்பீடு செய்தல், தொழில் வல்லுனர்களின் அனுபவ அறிவைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்குகள், மாணவிகள் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கற்றுக்கொள்ளுதல், மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தக் கற்று த்தரும் வகையில் பயிற்சிப்பட்டறைகள், குழுமனப்பான்மையுடன் தற்காலத் தேவை களுக்கேற்ற புதுமைக் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் ஹேக்கத்தான் என மாணவிகளின் வே லைவாய்ப்புக்கான திறன்களுக்கு வலுசேர்க்கும் வகையில் கல்லூரி மற்றும் தொழில்நிறுவனங்களின் கூட்டுப்பயிற்சியாக சினர்ஜி 2025 வடிவமைக்கப்பட்டிருந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா கூறும்போது, எங் கள் கல்லூரியில் மாணவிகளுக்கு முதலாண்டிலிருந்தே வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்புக்கு முழுமையாக மாணவிகளைத் தகுதிப்படுத்தும் தொடர் முயற்சியின் அடுத்த கட்டமாக சினர்ஜி 2025 நடைபெற்றது. ஐபிஎம், டிசிஎஸ், அசெஞ்சர், ராபர்ட் பாஷ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவிகளின் சிந்தனையைத் தூண்டி புதுமைக் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர உதவி யதோடு தொழில் நிறுவனங்களின் நேரடி வழிகாட்டுதலை வழங்கும் செய்முறைப ்பயிற்சியாகவும் அமைந்தது என்றார்.