கோயம்புத்தூர், 26-02-2025: “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோயம்புத்தூர் நகரில் முன்பு மக்கள் அன்றாடம் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அன்றாட வாழ்விற்கு தேவையான குடிநீர், நகரின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் சிறுவாணி, நொய்யல் ஆறுகள் மற்றும் அதன் சுற்றுப்புற ஏரிகள் போன்ற பாரம்பரிய நீர் ஆதாரங்களை நம்பி இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கோயம்புத்தூர் நகரம் அதன் குடிநீர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது, நகரின் 60 மாநகராட்சி வார்டுகளில் நேரடி குடிநீர் தேவைகளை கோவை மாநகராட்சி, சூயஸ் இந்தியா உடன் இணைந்து வழங்குவதன் மூலம் கோவை மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறது.
குடிநீர் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்
முன்பு, மக்கள் பாரம்பரிய குடிநீர் விநியோக ஆதாரங்களுடன் கூடுதலாக, பொது குழாய்கள், கை பம்புகள் மற்றும் இதர சிக்கலான வழிமுறைகள் மூலம் தண்ணீர் பெற்று வந்தனர். கோடை காலங்களில், நகரம் வழக்கமாக அசாதாரண நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் போது, ‘டேங்கர் லாரிகள்’, குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தன. ஆனால் இத்தகைய நடைமுறைகள், குடிநீர் சிக்கல்களுடன் குடிநீரை மக்களிடம் கொண்டு செல்லும் போது ஏற்படும் செயல்பாட்டு சிக்கல்கள் அதிகம் எதிர்கொள்கின்றன
நகரத்தில் குடிநீர் சரியாக விநியோகிக்கபட்டாலும், பல பகுதிகளுக்கு சில நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட வேண்டிய சூழல் நிலவியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை அதிக அளவில் சேமிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள்.
குடிநீர் பெறுவதற்கான புதிய தீர்வு
இது போன்ற குடிநீர் மற்றும் அதன் விநியோக சிக்கல்களுக்கு தீர்வு காண மாநகராட்சி எடுத்த முயற்சியில், தற்போது 24/7 மணிநேரம் கோவை நகரில் குடிநீர் விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் சூயஸ் இந்தியா இணைந்து நகரத்தின் குடிநீர் பற்றாக்குறை மற்றும் சீரான விநியோகத்திற்கான நடைமுறை குறித்து விரிவான ஆய்வு செய்து தடையற்ற குடிநீர் வழங்கும் வழிமுறைகளை செயல்படுத்த தொடங்கியது.
குடிநீர் மேலாண்மை
சூயஸ் இந்தியாவின் கோவை நகரத்திற்கான புதிய குடிநீர் மேலாண்மை, மேம்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் வகையில் செயல்படுகிறது. புதிய குடிநீர் மேலாண்மையில் நீர் சுத்திகரிப்பு, ஸ்மார்ட் மீட்டர் மற்றும் சிறந்த குடிநீர் குழாய் கட்டமைப்புகளின் பயன்பாடு, நீர் வீணாவது மற்றும் குடிநீர் குழாய் கசிவுகளையும் பெருமளவு குறைத்து, குடிநீர் விநியோக பயன்பாட்டை மேம்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் சேவை மற்றும் பராமரிப்பு
சூயஸ் இந்தியா அமைத்துள்ள அதிநவீன வாடிக்கையாளர் வசதி மையங்கள் மாநகரின் 5 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர உதவிக்கு 0422-6610000, என்ற தொலைபேசியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தீர்வு காணப்படுவதுடன் கோவை மக்களுக்கு 24/7 சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் குழாய் கசிவுகள், நீர் தரம், பில்லிங், மீட்டர் பிரச்சனைகள் மற்றும் வசூல் போன்ற பொதுவான பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன, கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வுகள் சீரமைக்கப்படுகிறது.
மாற்றம்
கோயம்புத்தூர் மக்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் அவர்கள், மொத்தமாக தண்ணீரை சேமிக்க வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது, இது குடிநீரில் ஏற்படும் மாசு அபாயங்களை குறைத்து சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் குடும்பங்கள் தங்கள் குடிநீர் பெறுவதற்கான தினசரி போராட்டத்தை தவிர்த்துள்ளது .
முன்பு குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி, தற்போது 24/7 மணி நேரம் குடிநீர் கிடைக்கும் நிலைக்கு
Leave a Reply