, ,

சினிமா ரசிகர்களே தியேட்ரில் விளம்பரம் போட்டு கடுப்பு ஏத்துறாங்களா? இந்த செய்தி உங்களுக்குதான்.

pvr inox
Spread the love

 

அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் பிவிஆர் ஐனோக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, அந்த நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் டிசம்பர் 26, 2023 அன்று பி.வி.ஆர்.மற்றும் ஐனாக்ஸ் தியேட்டரிர் மாலை 4.05 மணிக்கு ‘சாம் பகதூர்’ திரைப்படத்திற்கு மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து படம் பார்க்க சென்றுள்ளார். படம் மாலை 6.30 மணிக்கு முடிவடைய வேண்டும். அதன் பிறகு தனது வேலைக்கு செல்ல திரும்ப திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் 4.28 மணி வரை விளம்பரங்கள் காட்டப்பட்டுள்ளது. இதனால், படம் மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது.

தொடர்ந்து, ஆத்திரமடைந்த அபிஷேக் பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், விளம்பரம், டிரெயிலர் காட்டியதால், 6.30 மணிக்கு முடிய வேண்டிய படம் லேட்டாக முடிந்தது. இதனால், அன்றைய தினம் என்னால் திட்டமிடப்பட்ட பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை . எனக்கு பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கான இழப்பீட்டுத் தொகையை கணக்கிட முடியாது என்று புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து, நேரம் என்பது பணம் போன்றது என்பதை வலியுறுத்திய நுகர்வோர் நீதிமன்றம், ஒவ்வொருவரின் நேரமும் விலைமதிப்பற்றது. அதை விரயமாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. புகார்தாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பிவிஆர் சினிமாஸ் மற்றும் ஐனாக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக ரூ. 20,000 , வழக்கு செலவுக்காக 8,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக ரூ. 1 லட்சம் என மொத்தம் பி.வி.ஆர் மற்றும் ஐனாக்ஸ் நிறுவனத்துக்கு 1,28,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.