கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா, திடீரென ஏற்பட்ட வயிறு பிரச்சனையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, அவர்கள் மருத்துவமனை முன்பு திரண்டும், ஷகிராவின் விரைவான குணமடைதலை வேண்டி பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.
Leave a Reply