, , ,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் அத்திப்பாளையத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்

Sri ramakrishna college of arts and science
Spread the love

அத்திப்பாளையம் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் 16.02.2025 முதல் 22.02.2025 வரை நடைபெறுகிறது.
முகாமின் தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை முனைவர் பிரகதீஸ்வரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமின் நோக்கத்தை விளக்கி முனைவர் சஹானா ஃபாத்திமா, ஆர்.ஆர்.சி.திட்ட அலுவலர் உரையாற்றினார்.
நிகழ்வில் வாழ்த் துரைகளை சுரேஷ்குமார், ஒன்றிய பொறுப்பாளர் (அத்திப்பாளையம்), சின்னசாமி, முன் னாள் கவுன்சிலர் (அத்திப்பாளையம் ஊராட்சி), ராம்தாஸ், கோரண்டலார் குல மண்டப நிர்வாக பொறுப்பாளர், மற்றும் விஜயா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்-1, அத்திப்பாளையம்) வழங்கினர்.
இந்த முகாம் இளைஞர்களை சமூகப்பணியில் ஈடுபடுத்த, சமூக மேம்பாட்டிற்காக செயல்பட ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.
மாணவர்கள் சமூக சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி மேற்கொண்டுள்ளனர்.
சேவை, கற்றல், மாற்றம் என்பவற்றை முன்வைத்து இந்த முகாம் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியின் நிறைவாக சுபாஷிணி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நன்றியுரை வழங்கினார்.