சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் நடைபெறும் ஊழல் தொடர்பான விஷயங்களை கண்காணித்து, கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு என்ற அமைப்பு ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.இந்த நிறுவனம் அரசுத்துறையில் நிலவி வரும் ஊழல் தொடர்பாக தொழில் வல்லுனர்களிடம் கருத்துக்களை சேகரித்து, அதன்பேரில் முடிவுகளை வெளியிடுகிறது.
கடந்த 2024 ம் ஆண்டுக்கான ஊழல் புலனாய்வு தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 96 வது இடத்தில் இருக்கிறது. மொத்தமாக 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 96 வது இடத்தினை தக்கவைத்துள்ளது. இந்த நிறுவனம் பூஜ்யம் என்பதை ஊழல் நடக்கும் நிர்வாகத்தையும், 100 என்ற மதிப்பெண்ணை ஊழல் இல்லாத நிர்வாகத்திற்கும் வழங்குகிறது.

அந்த வகையில், 180 நாடுகளின் பட்டியலில் 96 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மதிப்பெண் 38 ஆகும். கடந்த 2023 ம் ஆண்டில் 39 மதிப்பெண் பெற்ற இந்தியா, தற்போது 1 மதிப்பெண்ணை இழந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கு 135 வது, இலங்கை 121 வது, வங்கதேசம் 149 வது, சீனா 76 வது இடத்லுத் உள்ளன. ஊழல் குறைந்த நாடுகளில் டென்மார்க் முதலிலும், பின்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்த இடத்தையும் தக்க வைத்துள்ளது.
Leave a Reply