பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 அன்று வட இந்தியாவில் அமைந்துள்ள பிரியாக்ராஜ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மீக கொண்டாட்டத்தை காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களும், புனிதர்களும் ,யோகிகளும் கலந்து கொண்டுள்ளனர். .கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 24 கோடி மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது மகர சங்கராந்தி அன்று துவங்கி மகா சிவராத்திரியில் முடிவடைகிறது. இந்த புனிதமான காலத்தில் நதிகளில் நீராடுவது பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்றும் மனம் தூய்மை அடையும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் ரிஷப ராசியில் குருவும் ,மகர ராசியில் சூரியனும் சஞ்சரிக்கும் காலகட்டமே கும்பமேளாவின் தொடக்கம் என ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது.
இந்த கும்பமேளா நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. பிரியாக்ராஜ், ஹரித்துவார், நாசிக், உசைன் போன்ற புனித தலங்களில் நடைபெறுகிறது. இந்த கும்பமேளாவிற்கு புராண கதையும் சொல்லப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடுவது ஏன்?
தேவர்களின் காலத்தை பொருத்தவரை ஒருநாள் என்பது பூலோகத்திற்கு ஒரு ஆண்டு என்பதாகும் .புராண கதையின்படி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் 12 நாட்கள் யுத்தம் நடந்தது அதன் பன்னிரண்டாவது நாள் முடிவில் தான் அமிர்த கலசம் தேவர்களுக்கு கிடைத்தது. அப்பொழுது அந்தக் கலசத்தில் இருந்து நான்கு துளிகள் விழுகின்றன. அந்த இடங்கள்தான் பிரயாக்ராஜ் ,ஹரித்துவார், உசைன், நாசிக் ஆகும். இதனை கொண்டாடும் விதமாகத்தான் கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் யுவான்சுவாங் இந்தியா வந்தபோதுபிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்டதாக தனது பயண குறிப்பில் எழுதியுள்ளார் .ஆகவே இது மிகவும் பழமை வாய்ந்த கொண்டாட்டமாகவும் உள்ளது. இந்த பிரபஞ்சத்திலேயே மாபெரும் சங்கமம் என்றால் இந்த மகா கும்பமேளா என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply