ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் சிறப்பு கல்லீரல் ஆதரவு குழு நிகழ்வை நடத்தியது.
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன், ஆபத்து உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலேயே கல்லீரல் நோயை கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்லீரல் நோயாளிகளுக்கு முழுமையான ஆதரவு மற்றும் கவனிப்பு தேவை என்றும் கூறினார். பொதுமக்களை பல்துறை கல்லீரல் குழுவுடன் தொடர்பு கொள்ளவும், சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை மேற்கொள்ளவும் ஊக்குவித்தார்.
ரத்த பரிசோதனைகள்; அல்ட்ராசவுண்ட்; ஃபைப்ரோஸ்கான் (கல்லீரல் ஸ்கேன்) போன்றவை மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுண்டப்பன், மருத்துவ இரைப்பை குடல் மற்றும் ஹெபடாலஜி நிபுணர் டாக்டர் பி. கார்த்திகேயன், காஸ்ட்ரோஎன்டாலஜி, ஹெபடாலஜி மற்றும் இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் பி. திருமால், ஆலோசகர், அறுவை சிகிச்சை இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சந்தீப் சந்திரசேகர், ஆலோசகர் மற்றும் அவசரகால மருத்துவர் டாக்டர் கண்ணன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மயக்கவியல் நிபுணர் டாக்டர் முத்துகுமார், அறுவை சிகிச்சை இரைப்பை குடல் நிபுணர், ஹெச்பிபி, ஜிஐ புற்றுநோயியல் மற்றும் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பால்வண்ணன், தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சிவகுமார், கதிரியக்க நிபுணர் டாக்டர் சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நோயாளிகளுக்கு உடல் திறனை மேம்படுத்த உதவியாக, டாக்டர் ஆர். பிரியவதனா(உடலியல் மருத்துவர்)உடற்பயிற்சிகள் குறித்து விவரித்தார். இவரை தொடர்ந்து, மது அருந்துதல் மற்றும் தவறான உணவு பழக்கங்களை கட்டுப்படுத்துவது குறித்து உளவியலாளர் சுபிஷா ஆலோசனைகளை வழங்கினார். சஹாயா அருள் மற்றும் குழுவினரால் தனிப்பட்ட ஊட்டச்சத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மனநலம் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக கவிபாலா மன அமைதி மற்றும் யோகா குறித்து விளக்கினார்.
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவமனை சார்பில் பொதுமக்களிடம் ஊக்குவிக்கப்பட்டன. இறுதியாக, கல்லீரலுக்கு ஏற்ற உணவு கண்காட்சி நடத்தப்பட்டு, கல்லீரல் நோயாளிகளுக்கான உணவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
ராயல் கேர் மருத்துவமனையில் கல்லீரல் நோய் விழிப்புணர்வு

Leave a Reply