இந்து முன்னணி போராட்டம் பலத்த பாதுகாப்பு:

Spread the love

இந்து முன்னணி போராட்டம் பலத்த பாதுகாப்பு:

உசிலம்பட்டி:

மதுரை,
உசிலம்பட்டி அருகே கணவாய் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்பினர் இன்று போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,

இன்று, தடையை மீறி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால். மாவட்டத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
இதன்
தொடர்ச்சியாக,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தேனி எல்லைப் பகுதியான ஆண்டிபட்டி கனவாய் பகுதி, உசிலம்பட்டி தேவர் சிலை, திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதியான உத்தப்ப
நாயக்கனூர், எழுமலை பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உசிலம்பட்டி டிஎஸ்பி் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் கார்கள்,பேருந்துகள் உள்ளிட்ட மதீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த முருகன் என்ற நபரை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.