, , ,

திருமலையில் ரத ஸப்தமி- பாதுகாப்பு பணியில் 1,250 போலீசார்

rathasaptami
Spread the love

திருப்பதி திருமலையில் ரத ஸப்தமி விழாவையொட்டி 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் அன்னமைய்யா பவனில் அற​ங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், வரும் பிப்ரவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு  2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.​ சர்வ தரிசன டோக்கன்களும் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வழங்கப்படமாட்டாது. இதேபோல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் பெறமாட்டாது. பாதுகாப்பு பணிக்கு 1,000 தேவஸ்தான கண்காணிப்பு படையினர், 1,250 காவல்துறையினர்  நியமனம் செய்யப்படுகின்றனர்.