ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
• சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், இயக்குநர், ரூட்ஸ் இந்தியா நிறுவனம் மற்றும் செயலர், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
• முனைவர் பி.எல்.சிவக்குமார், முதல்வர் மற்றும் செயலர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.
• முனைவர் சி.சித்ரா, தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
• முனைவர் த.விஸ்வநாதன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.
கோயம்புத்தூர் 30, ஜனவரி 2025:
கோவை, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், “சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் பன்முக ஆய்வு” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் மிக்கவாராய் திகழும் கவிதாசன் அவர்கள் இதுவரை 60க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், 25க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், தன்னம்பிக்கை மேடைப் பேச்சுகள், கவியரங்கப் பதிவுகள், இலக்கியம் படைப்பதோடு நில்லாமல், பல இலக்கிய அமைப்புகள் மூலம் புதிய படைப்பாளர்களை உருவாக்கி வருபவர். ஆகவே, அவருடைய படைப்புகளை கருவாகக் கொண்டு இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் கவிதைகள், கட்டுரைகள், கவியரங்கக் கவிதைகள், மேடைப் பேச்சுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி உரைகள் ஆகிய களங்களில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பேராசிரியர்கள், பல்துறை ஆய்வாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இக்கருத்தரங்கிற்கான கட்டுரை வழங்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் கருத்தரங்க நாளன்று ISBN எண்ணுடன் புத்தகமாக வெளிடப்படுவதோடு, கட்டுரையாளர்களுக்கு கட்டுரைப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. கட்டுரையாளர்ககள் எவ்வித பதிவுக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
கருத்தரங்க நாளன்று மதிப்பீட்டாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 10 கட்டுரைகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளன. மேலும், பல்துறை சாதனையாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பல விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கபடவுள்ளனர்.
சமூக மேம்பாடு, மனித உறவு மேம்பாடு, குடும்ப உறவு மேம்பாடு, சமூக உறவு மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தலைமை மற்றும் ஆளுமைப் பண்பு, திறன் மேம்பாடு, சமூகச் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள், சமூக முன்னேற்றச் சிந்தனைகள், மேலாண்மைக் கோட்பாடுகள், இந்திய மேலாண்மைக் கோட்பாடுகள், நிர்வாகக் கோட்பாடுகள், திட்டமிடல் கோட்பாடுகள், தொழிநுட்பச் சிந்தனைகள், வெற்றிக்கான வழிமுறைகள், இந்தியத் தத்துவங்கள், இந்திய தேசியச் சிந்தனைகள், உளவியல் சிந்தனைகள், இயற்கை மற்றும் சூழலியல், இலக்கிய ஒப்பீடு, நவீன வாழ்வியற் சிந்தனைகள், பெண்ணியச் சிந்தனைகள், ஆன்மீகச் சிந்தனைகள், பேச்சுக் கலை, கட்டுரைக் கலை, படைப்பாக்கக் கலை போன்ற பல்துறை நோக்கில் கட்டுரைகள் இருக்கலாம்.
ஆய்வுக் கட்டுரைகள் kaviconf2025@srcas.ac.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகவல்களுக்கு – 8883362806, 9843682459, 9500446604 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
Leave a Reply