, ,

​ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம்

royal care hospital
Spread the love

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவ துறை சார்பில் ஒரு நாள் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம் சமீபத்தில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கோவை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கத்தில், நியூ டெல்லியில் உள்ள விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை துறை தலைவர் மற்றும் கோர்ஸ் இயக்குநர் டாக்டர் அனிர்பான் ஹோம் செளதுரி, புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை  டாக்டர் கபில் தேவ் சோனி, மற்றும் அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் ஃபவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் ஸ்ரேயா சட்டோபாத்யாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ஆராய்ச்சி முறைகள் குறித்து முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மருத்துவத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு இந்த பயிலரங்கம் மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சி மிக முக்கியமானது; குறிப்பாக, தரவு மேலாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகியவை மருத்துவ ஆராய்ச்சியின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவுள்ளதாக குறிப்பிட்டார். மருத்துவர்கள் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டுமென ஊக்கமளித்தார்.

இந்த பயிலரங்கம், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சை மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் எம்.என். சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆராய்ச்சி திட்டம் உருவாக்கம், சரியான ஆராய்ச்சி கேள்விகளை அமைத்தல், மருத்துவ பரிசோதனைகளை புரிந்துகொள்வது மற்றும் ஏஐ கருவிகளை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்துவது போன்ற முக்கியமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.

நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் செயல்முறை சார்ந்த பயிற்சிகள் மூலம் பங்கேற்பாளர்கள் நேரடி திறன் அறிவைப் பெற்றனர். ஆராய்ச்சியில் செயல்படும் இளம் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு இது மிக முக்கியமான பயிலரங்கமாக அமைந்தது.