கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில், தேசிய அளவில் சண்டிகர், மொகாலி மற்றும் சென்னையில் நடைபெற்ற 61வது தேசிய சறுக்கு விளையாட்டு போட்டிகளில் கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு அசோசியேசன் சார்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உள்ளிட்ட 20 பதக்கங்களை வென்றதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு தலைவர் நா.மாலதி, மாநகர கல்வி அலுவலர் முருகேசன், கோயம்புத்தூர் மாவட்ட சறுக்கு விளையாட்டு அசோசியேசன் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சாந்தநரசிம்மன், துணை தலைவர் அருண்பிரசாத், உறுப்பினர் ரமேஷ்குமார், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளனர்
கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் வாழ்த்து பெற்ற கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு சாம்பியன்கள்



Leave a Reply