,

72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

vijayakanth
Spread the love

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது  உடலுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 24 போலீசார் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,ஓபிஎஸ், ஜெயக்குமார், ஜி.கே.வாசன்,முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் உடலுக்கு அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.