தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் நடத்தவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெறும்.
1. சென்னை மண்டலம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
2. வேலூர் மண்டலம்: இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை
3. கடலூர் மண்டலம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாநிலம்
4. திருச்சி மண்டலம்: அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர்
5. தஞ்சாவூர் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
6. மதுரை மண்டலம்: சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர்
7. நெல்லை மண்டலம்: தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி
8. கோவை மண்டலம்: திருப்பூர், நீலகிரி
9. சேலம் மண்டலம்: நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு.
போட்டிகள் நடைபெறும் நாட்களும் இடங்களும்
சென்னை மண்டலம்: 26.01.25 எஸ்.ஆர்.எம். – காட்டாங்குளத்தூர்- சென்னை
வேலூர் மண்டலம்: 02.02.25 தூய நெஞ்சக் கல்லூரி – திருப்பத்தூர்
கடலூர் மண்டலம்: 09.02.25 சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி – கடலூர்
திருச்சி மண்டலம்: 16.02.25 ஜமால் முகமது கல்லூரி – திருச்சி
தஞ்சாவூர் மண்டலம்: 23.02.25 பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி – தஞ்சாவூர்
மதுரை மண்டலம்: 02.03.25 தியாகராசர் கல்லூரி – மதுரை
நெல்லை மண்டலம்: 09.03.25 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி
கோவை மண்டலம்: 16.03.25 பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – கோவை
சேலம் மண்டலம்: 23.03.25 ஏ. வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி – சேலம்
இந்த போட்டியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பயில்வோர் மட்டும் பங்கேற்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 25 வரை ஆகும்.
06.04.25 முற்பகலில் மாநில அளவிலான போட்டி நடைபெறும் மற்றும் பரிசுகள் அன்று மாலை வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்க https://forms.gle/jQPWBToWbzzsbVvz8 என்ற கூகுள் படிவ இணைப்பில் பதிவு செய்யலாம்.
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ மாநில அளவிலான பேச்சுப் போட்டி

Leave a Reply