, , ,

ஆன்மீகத் தேடலை  நிறைவாக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் எம்.கிருஷ்ணன்

sri krishna sweets
Spread the love

ஆ.வெ.மாணிக்கவாசகம்

கோவைப் பகுதியின் இனிப்பகங்களின் அடையாளமாக திகழ்வது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். கோவை காந்திபுரம்,
பீளமேடு, ராமநாதபுரம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்,திருப்பூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தரத்தினை முதன்மைப்படுத்தி விதவிதமான சுவையுடன் கூடிய இனிப்பு வகைகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நியாய விலையில் அனைவருக்கும் அளித்து வருகிறது. இப்படி இனிப்பு சுவை மட்டுமின்றி ஆன்மீகம், இசை,கலை, கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம், தமிழ் மொழி வளர்ச்சி,திறமை வாய்ந்த கலைஞர்கள்,உடல் நலம்,  விளையாட்டு என அனைத்து பரிமாணங்களிலும் கோவை மக்களை உற்சாகப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் புதியதொரு சிந்தனை திறத்தினை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன்.
ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதே எல்லை இல்லாத இன்பம், இனிமை தரும்  ஆன்மீகத் தேடலை “எப்ப வருவாரோ..” என்ற நிகழ்ச்சி மூலம் கோவை பகுதி மக்களின் பல்வேறு ஆன்மீக வினாக்களுக்கு எளிமையான விடையினை,
ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மூலம் அளித்து வரும் அளப்பரிய பணியினை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் எம். கிருஷ்ணன் அளித்து வருகிறார் .
இந்த 2025-ம்  ஆண்டுக்கான நிகழ்வுகள் ஆண்டின் முதல் நாளில் வடகோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி  சரோஜினி நடராஜ் கலையரங்கில் மங்களகரமாக தொடங்கியது.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு, அன்பர்களும், அடியார்களும் நிகழ்விடத்தில் குவிந்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன் தலைமையில் “அருள் வளர் செம்மல்” விருதுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால
கிருஷ்ணன் திருக்கோயில் நிர்வாகி ஜி. கார்த்திகேயன் ,
ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ் .முரளி கிருஷ்ணன், சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் ஆலய நிர்வாகி சிரவை நாகராஜன், திருப்பூர் சேக்கிழார் புனித பேரவை நிர்வாகி பி முரளி, குருக்கள்பட்டி ஸ்ரீ கருப்பராய சுவாமி திருக்கோவில் நிர்வாகி முருகேசன் ஆகியோருக்கு
எம் .கிருஷ்ணன் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர்
மனித வாழ்க்கையில் பணம், பொருள்  உள்ளிட்டவைகளை தேடுபவர்கள் அதிகம் இருக்கும் இவ்வுலகில், அப்பொருட்களை தவிர்த்து விட்டு அறம், தொண்டு மூலம் வாழ்வின் உயர் நிலையை அடையலாம் என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமானுஜர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த மகான் செயலே தவமாகும் என வாழ்ந்த சீலர்.
கோவில்களில் பணிவிடை செய்வது, ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் சமம் என நினைத்து சமத்துவத்தை ஏற்படுத்துவது, பரம்பொருளிடம் சரணாகதி அடைவது என மூன்று தத்துவங்களை முன் வைத்தவர் ராமானுஜர். எந்த பேதமும் இல்லாமல் சமத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டமைத்தவர் அவர். ஜாதிகளால் வந்த பிரிவினைகளை அவர் உடைக்கவில்லை. காலம் காலமாக பெண்களையும் தவிர்த்து வந்த அந்தக் காலகட்டத்தில் அவர்களையும் சமமாக மதித்து அவர்களையும் தங்களது சீடர்களாக சேர்த்துக்கொண்ட சீர்மிகு அருளாளர் ராமானுஜர்.
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கு குழந்தையாக கிடைத்தவர் தான் ஆண்டாள் பிராட்டி.
கண்ணபிரான் மீது அதிக பக்தி கொண்டு சிறு வயது முதலே வளர்ந்தவள். திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற தமிழ் அமுதங்களை அருளியவர். அவர் 13 வயதிலேயே பாசுரங்களை பாடி பரவியவர். அந்த வயதில் எப்படி பாட முடியும் ? என கேள்வி எழுப்புகின்றனர்.
40 வயதை தொடாத அத்வைதத்தை அருளிய  ஆதிசங்கரர், வீரத்துறவி விவேகானந்தர், மகாகவி பாரதி போன்றோர் பல சாதனைகளை செய்துள்ளனர். ஏன் ?நாம் வாழும் காலத்திலேயே
16 வயதில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.
18 வயதிலேயே சென்னை குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனார்.
 ஆண்டாளும் சிறு வயதிலேயே அற்புதங்களை நிகழ்த்தியவர்.
ஆண்டாளின் பாசுரங்கள் பகுத்தறிவையும், அறிவியலையும் உள்ளடக்கியவை. ஆன்மீகத்தையும் ,அறிவியலையும் சமமாக தமது பாசுரங்களில் வடிவமைத்தவர். ஆண்டாள் .அவர் எப்போதோ வரக்கூடியவர் அல்ல :எப்போதும் வரக் கூடியவர்.
இசைக்கவி ரமணன்
பத்ராசலம் ராமதாஜர் 17 ஆம் நூற்றாண்டில் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். 68 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தமது 15 வது வயதில் பெற்றோரை இழந்தவர். கோல்கொண்டா சுல்தானியாக இருந்த தானியா என்பவரின் அரசாட்சியில் செயல்பட்ட அரசில் வரி வசூல் பணியை செய்தவர்.
ராமபிரானை முழு முதல் கடவுளாக கொகொண்டு வணங்கி வந்த இவர்,ஸ்ரீ ராமரும் சீதாப்பிராட்டியும் பாதம் பட்ட பத்ராசலத்தில் பணியாற்ற தானியா அனுப்பினார். அங்கு இந்துக்கள் மீது சுமத்தப்பட்ட வரியை வசூல் செய்யும் பணி வழங்கப்பட்டது.
அப்படி வசூல் ஆன தொகையினை ராமச்சந்திர மூர்த்தியின் பால் கொண்ட அதிக பக்தியால் சீதா ஸ்ரீ ராமச்சந்திர  திருக்கோயிலை கட்டினார். அரசின் பணத்தை கையாடல் செய்ததற்காக அரசர் அவருக்கு சிறை தண்டனை விதித்தார். சிறையில் அவருக்கு பல கொடுமைகள் செய்யப்பட்டது இருந்த போதிலும் ராமன் மேல் அதிக பாடல்களை பாடினார்.
அவரின் பக்தியை மெச்சிய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும், லட்சுமணனும்   சுல்தானிய அரசருக்கு காட்சி கொடுத்து   பொன்னும், பொருளும் கொடுத்து அவரை விடுவித்தனர். ராமதாசரால் கடவுள் ராமனையும், லட்சுமணனையும் கண்டு தரிசனம் செய்யும் பாக்கியத்தை ஏற்படுத்திய ராமதாஜரை உளப்பூர்வமாக மகிழ்ந்து வணங்கினார் அரசர்.
இடைவிடாத இறைவனிடம் தொடர்பு, மாறாத பக்தி, காத்திருப்பு, சரணாகதி ஆகிய நான்கு நிலைகளில் உறுதிப்பட வாழ்தல் வேண்டுமென ராமதாசர் அனைவருக்கும் அறிவுறுத்திச் சென்றார் .
எப்ப வருவாரோ நிகழ்ச்சியில் இன்று 5-ம்  தேதி ஞாயிறு மாலை 6:30 மணிக்கு முத்துசாமி தீட்சிதர் குறித்து வழக்கறிஞர் க. சுமதி பேசுகிறார்.