கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட், கோஇண்டியா மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகிய மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர்.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் மிதுன் ராம்தாஸ், கோஇண்டியா அமைப்பின் தலைவர் டி.விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தமானது கல்லூரி மாணவிகளுக்கு இன்டர்ன்ஷிப், அதிநவீன தொழில்நுட்பங்கள், தொழில் நிறுவனங்களுக்கு சென்று கள அனுபவம் பெறுதல் போன்றவற்றோடு தொழில்நிறுவனங்களோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் என்றார்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Leave a Reply