அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி நடத்திய பேரணியில் ரஷ்யப் பெண் ஒருவர் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரை செல்லத்தம்மன் கோயிலில் திரண்ட பாஜக மகளிர் அணியினர், அம்மியில் மிளகாய் இடித்து கண்ணகி அம்மனுக்கு பூசினர். அப்போது ரஷ்யாவை சேர்ந்த கேத்ரினா என்பவர், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இணைந்து மிளகாய் இடித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர், பெண்களுக்கு எதிராக எங்கும் குற்றங்கள் நடைபெறக் கூடாது எனவும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். எனவே, பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெறும் நீதிக்கான பேரணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply