, , ,

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

anna university
Spread the love

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர்கள் என புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ வசதியும் செய்து தர தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.