, ,

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர்​ ரஜினிகாந்த்

rajnikanth
Spread the love

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்​ ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 – 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றாா்.​  இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறாா். இந்தப் போட்டியில் வாகை சூடிய 2வது இந்தியா் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து, பொன்னாடை போர்த்தி புத்தகம் பரிசளித்து வாழ்த்திநார். ஆபோது குகேஷின் தாய் மற்றூம் தந்தை உடனிருந்தனர்.