, , ,

ராம்ராஜ் காட்டன் போரூர் ஷோரும் திறப்பு விழா

ramraj cotton
Spread the love

தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை  29/20 நாதன் ஆர்கேட், மெட்ரோ பில்லர் 237 அருகில், ஆற்காடு ரோடு, காரம்பாக்கம், என்ற முகவரியில் துவங்கி உள்ளது.
மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க. கணபதி ஷோரூமை திறந்து வைத்தார். ச. சங்கர் கணேஷ் , போரூர் 151வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் சாந்தி ராமலிங்கம், போரூர் 153வது வார்டு மாமன்ற உறுப்பினர், மங்கள ஒளி ஏற்றி வைத்தனர். டி. கலியசுந்தரம், காவல் உதவி ஆணையர், எஸ்.ஆர்.எம்.சி. சரகம், போரூர், முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
எஸ்.குமரேசன் சுவாமிநாதன், உரிமையாளர் நாதன் ஆர்கேட், முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
ராம்ராஜ் காட்டன். உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட துணிரகங்களிலிருந்து முன்னணி வல்லுநர்களை கொண்டு வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள் தயாரித்து தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்லாது வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, நறுமண வேட்டி, ரிங்கிள் பிரி வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி, மயில்கண் வேட்டி, பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் ஏராளம். காட்டன் சர்ட்டுகள், எம்பராய்டரி சர்ட்டுகள், ரிங்கிள் பிரி் ‘சர்ட்டுகள், கூல் காட்டன் சர்ட்டுகள், சுபமுகூர்த்த சர்ட்டுகள், அல்டிமேட் சர்ட்டுகள், டிசைனர் சர்ட்டுகள், பட்டு சர்ட்டுகள், பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் என ரகங்கள் ஏராளமாக உள்ளன.
இளைஞர்களின் மனம் கவரும் வகையில் பல வண்ணங்களில் டி- சர்ட்டுகளும் இங்கு கிடைக்கின்றன.
அதே போல், ஆண்களுக்காக பிளையின் வெண்மையில் மட்டுமின்றி டிசைனுடன் கூடிய பனியன்கள். ஜட்டிகள், ‘டிரங்க்ஸ்’ எனப்படும் வேட்டி கட்டிக் கொள்பவர்களுக்கென்றே பிரத்யேகமான ‘வேட்டி டிராயர்கள்’ என்ற உள்ளாடையும் ராம்ராஜ் காட்டனில் கிடைக்கிறது.
வேட்டிக்கட்டி கொள்பவர்களின் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பெல்ட்டுகள், கைக்குட்டைகள், சாக்ஸ், டவல்கள்என்று நீண்டுகொண்டே போகின்றன.
பெண்களுக்கென உள்ளாடைகளும் ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் கிடைக்கின்றன.
இளைஞர்களை கவரும் வகையில் யூத்
கலெக்ஷன் மற்றும் குழந்தைகளுக்கான வேட்டி சட்டைகள், இளைஞர்களை கவரும் வகையிலான வெல்குரோ பாக்கெட் வேட்டிகள், லினன் சர்ட்டு வகைகளும், பெண்களுக்கான லெக்கின்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்து விதமான உள்ளாடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இப்போது ராம்ராஜ் நிறுவனம் பெண்களுக்கென்றே காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் தொடங்கியுள்ளது.