, ,

நந்தி தேவர் எனப்படும் நந்தீசர்

Nandhi-Devar
Spread the love

பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார்
தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை இல்லை, இந்நிலையில் ஒருநாள் சப்தரிஷிகள் அவருடைய ஆஸ்ரமத்திற்கு வந்தனர்.
சிலாத முனிவர் அவர்களை வரவேற்று தன் ஆஸ்ரமத்தில் உணவு உண்ணுமாறு வேண்டினார், ஆனால் அவர்கள் குழந்தைப் பேறு இல்லாத இடத்தில் நாங்கள் உணவு அருந்துவதில்லை என மறுத்து சென்று விட்டனர். இதனால் மனம்வருந்திய சிலாத முனிவர் திருவையாற்றில் நீராடி பஞ்சாட்சர தவமிருந்தார். அவரின் தவத்திற்கு மனம் இறங்கிய சிவனார், வரம் தந்து மறைந்தார். அருளால் கிடைத்த ஆண்மகனுக்கு நந்தி என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
வீரகன் என்ற கணநாதர், சதுரகிரி வனங்களையும் அங்கு வசிக்கும் சித்தர்களையும் கண்டு அதிசயமுற்றார். கயிலையிலும் சிறந்த இடமாக இருக்கிறதே என்றும் இங்கேயே தங்கிவிட்டால் நல்லது என்று எண்ணினார். அவரது எண்ணம் அறிந்த சிவ பெருமான் மானிட வடிவம் ஏற்று அங்கு வாக அருளுடன் வழி காட்டினார். அப்போதுதான் புத்திரப்பேற்றுக்காக தவம் புரிந்துவந்த சிலாத முனிவரின் மகனாக நந்தீசர் என்ற பெயரில் பிறந்து வாழ்ந்தார்
சதுரகிரியில் சிவன் சன்னதிக்கு முன்பாக ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். வைத்தியம், யோகம், ஞானம் ஆகிய கலைகளில் வல்லவராய் திகழ்ந்தார். தாம் இயற்றிய நூல்களை தமது சீடர்கள் உதவியோடு உலகறிய செய்தார்.
தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும். நந்தி’ என்ற சொல்லுக்கு ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.நந்தி’ என்ற வார்த்தையுடன் ஆ’ சேரும்போதுஆநந்தி’ என்ற பொருள் தருகிறது.
`நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு! என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது. ஆக, நந்தியம் பெருமான் தன்னை வணங்குபவர்க்கு ஆனந்தத்தைத் தருபவர் ஆவார்.
நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
சிவபெருமான் இடத்தில் இருந்து சிவாகமங்களைத் தெளிந்து நமக்கு அருளினார் நந்திதேவர். ஆதலால் சைவ சமயத்திற்கு முதல் குருவாக விளங்குகிறார். நந்திக்கு `அதிகாரநந்தி’ என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான் நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார் – nandheesar siddhar.
சிவபெருமான் மற்றும் சிவஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் அகம்படி முதலி தேவனாகிய நந்திக்கே உரியது. இதன் அடையாளமாகத்தான் கோவில்களில் சுற்று சுவர்களில் நந்தியின் உருவை அமைத்துள்ளார். நந்திதேவர் சித்தர்கள், முனிவர்க்கெல்லாம் முதல் குருவாக விளங்குகிறார். சிவ, சக்தி இருவர் முன்னிலையிலும் இருப்பவர் நந்திதேவர், சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது.
இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும். நந்திதேவரின் உத்தரவு பெற்ற பின்பே, சிவபெருமானின் ஆலயத்தினுள் நாம் பிரவேசிக்க வேண்டும் என்கிறது வேதம். இதன் காரணத்தை பசவ புராணம் கூறுகிறது. சிவபெருமான் ஒரு தடவை நாரதரிடம் நான் விரைவில் பூலோகம் செல்வேன்.
தர்மத்தைக் காத்து மீண்டும் சைவம் தழைக்கச் செய்வேன். நான் வரும் வரையில் கயிலாயத்தில் நந்தி தேவன் எனது இடத்தில் இருப்பான் என்றார். அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் விரிந்தது. அதைப் புரிந்து கொண்ட சிவபெருமான், நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன். ஆதியில் அவதரித்தவன்.
நானே நந்திதேவன். நந்தி தர்மமே வடிவானவன். சிவாய நம என்ற பஞ்சாட்ச மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே. எப்போதும் என்னைச் சுமந்து நிற்கும் நந்திதேவன் எனக்கு ஈடாகத் திகழ்பவன்.
நந்திதேவனை வழிபடுபவர்களுக்குச் சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச், செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடுபேற்றையும் அவர்கள் அடைவர் என்று நந்திதேவரின் பெருமைகளை எடுத்துக் கூறினார்
சிவபெருமான். சிவபெருமான் தனக்கு இணையாக நந்திதேவரைக் கூறி உள்ளதால் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் நந்தி தேவரை வணங்க வேண்டும். அதனால், தன்னை வணங்குபவருக்கு மட்டுமல்ல, நந்திதேவரை வணங்கியவருக்கும் மோட்ச சுகத்தையும் மக்கட் பேற்றையும், பக்தியையும், ஊக்கத்தையும், காரிய சித்தியையும், எல்லா வரங்களையும் அளித்து வருகிறார் சிவபெருமான்.