புதுதில்லியில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024 சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள் நிகழ்வில் கோவையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை “தெற்கு மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வரும் மிகச் சிறந்த மருத்துவமனை” என்ற பிரிவில் சஞ்சீவினி விருதைப் பெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தும் எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் இந்த விருதை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் இணைந்து பெற்று கொண்டார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் பி. டபிள்யு ஹெல்த் கேர் வேர்ல்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து சஞ்சீவினி எனும் மருத்துவ கண்காட்சியை டெல்லியில் நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக ‘சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள்’ வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், சுகாதாரத்துறை தலைவர்களின மாபெரும் கூட்டம் நடைபெற்றது, அவர்கள் அனைவரும் மருத்துவ சுற்றுலாவின் எதிர்காலம், உலகளாவிய மருத்துவ அணுகல் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் மருத்துவ இடைவெளியைக் குறைப்பதில் மருத்துவமனைகளின் பங்கு குறித்து விவாதித்தனர் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இதில் “உலகளாவிய மருத்துவ அணுகும் வாய்ப்புகள் மற்றும் அரசு நிதியுதவியுடன் வரும் நோயாளிகளுக்கான சவால்கள்” குறித்த குழு அமர்வு முக்கிய விவாதங்களில் ஒன்றாகும்
இந்த அமர்வின் முக்கிய பேச்சாளர் ஆர். சுந்தர், இந்தியாவிலும் உலகெங்கிலும் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களை பற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திரு. ஆர். சுந்தர் ஊடகங்களுடன் பேசியபொழுது அங்கீகாரத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். “இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுவது, நாங்கள் வழங்கும் மருத்துவ சேவையின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. உயர்மட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதிலும், சர்வதேச பிராந்தியங்களில் நமது இருப்பை விரிவுபடுத்துவதிலும் இது எங்களை ஊக்குவிக்கிறது. உலகளாவிய நோயாளிகளுக்கு சேவை செய்வதிலும், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குவதிலும் எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது”. என்றார்.
Leave a Reply