எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை நான் விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை என இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரித்துள்ளார் .
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்தமண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply