நடிகை புவனேஸ்வரி கடுமையான உழைப்பால் டிவி, சினிமா என பலவற்றில் நடித்தார். விபசரா வழக்கில் சிக்கியதால் அவரின் சினிமா வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டது. பின்னர், வழக்கில் இருந்து விடுபட்டு, சேதுராமன் தலைமையில் இயங்கிய தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருக்கிறார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
தற்போது, புவனேஸ்வரி தற்போது பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, துறவு பூண்டு சாமியாராக வாழ தொடங்கியுள்ளார். காசிக்கு சென்று தீட்சதையும் பெற்றுள்ளார் அதுமட்டும் இல்லாமல், தினந்தோறும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார் .கோயம்பேட்டில் உள்ள கோவில் ஒன்றிலும் தினமும் அன்னதானம் இவரின் சார்பில் நடக்கிறது.
இது குறித்து புவனேஸ்வரி கூறியதாவது,’ நடிப்பில் உச்சத்தில் இருந்த போது, ‘’எதிர்பாராமல் சிக்கலில் சிக்கினேன். நீதிமன்றத்தில் என்னை நிரூபித்து வெளியே வந்தேன். ஆனாலும், இந்த சமூகம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு ஆன்மீகத்தில் இறங்கினேன். தினமும் கோவில்களுக்கு செல்ல தொடங்கினேன். சிறு வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அனுபவம் உண்டு. இப்போது, என்னிடத்தில் பணம் இருக்கிறது.
அதனால், இப்போது தினமும் 300 பேருக்கு உணவளிக்கிறேன். கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் என அனைத்துக்கும் செல்கிறேன். எந்த மதமும் என் ஆன்மீக பயணத்துக்கு தடையாக இருக்க கூடாது. ஒரு அரசியல் கட்சியிலும் மகளிர் அணி தலைவராக இருக்கிறேன். தீபாவளி பண்டிகைக்கு 10 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன். என்னை மக்கள் எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு அதை பற்றி கவலை இல்லை. நான் என்னை இறைப்பணிக்கு அர்ப்பணித்து விட்டேன். காவி உடை அணிந்தால் , என்னை விளம்பரப்படுத்தியது போல அமையும். அதனால், அந்த ஆடை அணியவில்லை. எனக்கு பிடித்த அரக்கு சேலை, மஞ்சள் நிறத்தில் உடை அணிகிறேன். கழுத்தில் ருத்திராட்சையும் அணிந்துள்ளேன் ‘’என்று தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரி இப்படி அறப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, தமிழகத்தில் மற்றோரு பெண் சாமியாரும் பிரபலமாக உள்ளார். உடம்பெல்லாம் தங்கத்தில் ஜொலிக்க , பண மழையில் இவர் குளித்து வருகிறார். இவரை, பற்றிய மீம்கள், வீடியோக்கள் பலவும் வலம் வரும். அவர்தான், அன்னபூரணி அம்மா. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாக மாறியவர். இவரும், திடீரென்று பராசக்தியின் அவதாரம் என கூறிக்கொண்டு திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்துள்ளார். தற்போது, இவர் மூன்றாவதாக கல்யாணம் முடித்துள்ளதுதான் ஹைலைட்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் இந்த அன்னபூரணி. தற்போது, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் தொடங்கியுள்ளார். முதல் கணவர், குழந்தையை பிரிந்த இவரின் இரண்டாவது கணவரின் பெயர் அரசு. இவர் திடீரென்று இறந்து போனார். அரசுக்கும் அன்னபூரணிக்கும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடந்தது. தனது இரண்டாவது கணவருடன் திருமணம் நடந்த அதே நவம்பர் 28 ஆம் தேதி ரோகித் என்ற தனது உதவியாளரை இப்போது அன்னபூரணி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை ஆசிரமத்தில் நடந்த இவர்களது திருமணத்தில் அவரின் பக்தர்கள் என்று கூறிக் கொள்ளும் ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர்
திருமணம் குறித்து அன்னபூரணி கூறுகையில், மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன்.சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன. பெண்ணாக இருப்பதால் ஒரு ஆதரவு தேவை என்பதால் மூன்றாவது திருமணம் செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
‘அறப்பணி’ புவனேஸ்வரி: தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணி, தமிழகத்தை கலக்கும் இரு பெண் சாமியார்கள்!

Leave a Reply