,

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : துபாயில் இந்திய போட்டிகள்!

ICC Champions Trophy
Spread the love

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளதால், இந்திய அணி பங்கேற்க மறுத்து விட்டது. இதனால் பிசிசிஐ சார்பாக ஆசியக் கோப்பையை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் யோசனை முன் வைக்கப்பட்டது. இதனை அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஏற்ற நிலையில், பாகிஸ்தான் மட்டும் ஏற்கவில்லை. ஆனால், இந்தியாவும் தன் முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, நேற்று ஐசிசி தலைவர் ஜெய்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த்யா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். அந்த வகையில்,பாகிஸ்தான் இந்தியா மோதும் ஆட்டமும் துபாயில்தான் நடைபெறவுள்ளது.