கடனை அடைக்க தனது ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தை அண்ணன் முகேஷ் நடத்தும் ஜியோவிடம் விற்கவும் முயன்றார். ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் கடந்த 1994 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஃபோகாம் என்ற பெயரில் முகேஷால் தொடங்கப்பட்டது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா? . நிறுவனத்தை வாங்கினாலும் கடனுக்கு நான் பொறுப்பல்ல என்று முகேஷ் கையை விரித்தார். கடன்காரர்கள் நெருக்கடி , வழக்கு என 2018 ஆம் ஆண்டில் இருந்து அனில் அம்பானி தினமும் நீதிமன்றத்துக்கு நடக்க வேண்டியது இருந்தது. இதற்கிடையே, சுவீடனின் தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் எரிச்சனும் அனில் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தங்களிடம் இருந்து சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் என்று எரிக்சன் குற்றம் சாட்டியது. இதுதொடர்பான வழக்கில் அனில் அம்பானியை குற்றவாளி என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அப்படி செலுத்தவில்லை எனில் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த தருணத்தில்தான் அனிலின் தாயார் தம்பிக்கு உதவும்படி முகேசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, எரிக்சனுக்கு வழங்க வேண்டிய தொகை 550 கோடி ரூபாய் மற்றும் வட்டித் தொகை 21 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 571 கோடி ரூபாயாக, அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த தருணத்தில் அனில் அம்பானி அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், நீட்டா அம்பானிக்கும் நன்றியை தெரிவித்தும் இருந்தார்.
திவால் என்று அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் கம்யுனிகேசன்ஸ்
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி தேசிய சட்ட நிறுவனங்
களின் தீர்ப்பாணயம் ரிலையன்ஸ் கம்யுனிகேசன் நிறுவனத்தை திவாலானதாக அறிவித்தது. இனிமேல் சொத்துக்களை விற்று கடனை அடக்க வேண்டும். தற்பேது, அனில் அம்பானிக்கு மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. தனது லட்சியத்தின்படிதான் அனில் அம்பானி முடிவெடுப்பதும் அதற்கான வியூகங்களை சரியாக வகுக்காததுமே அனிலின் தோல்விக்கு காரணமென்று இந்தியா டுடே எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. தற்போது, ரிலையன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் நடத்தி வந்த பிக் சினிமாஸ் விற்கப்பட்டு விட்டது. ரிலையன்ஸ் infrstructure கவுதம் அதானிக்கு 18 ஆயிரத்து 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதோடு, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு சொந்தமான மத்திய பிரதேச மாநிலம் சாசன் பகுதியிலுள்ள ஒரே பவர் பிளான்டில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி முடங்கிக் கிடக்கிறது. முறையான கேஸ் விநியோகம் இல்லாததால், இந்த நிறுவனத்தை நடத்த முடியாத சூழல் இருப்பதாக பங்குதாரர்களிடத்தில் அனில் அம்பானி கூறியுள்ளார்.
இந்திய வங்கிகளிடம் மட்டுமல்ல சீன வங்கிகளிடமும் 925 மில்லியன் யு.எஸ். டாலர்களை அனில் அம்பானி கடன் வாங்கியுள்ளார். இந்த சீன வங்கிகள் சீன அரசுக்கு சொந்தமானவை. இந்த வங்கிகளும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு விசாரணையின் போது, தன்னிடத்தில் விற்க இப்போது எதுவுமே இல்லை.தற்போது என் மதிப்பு பூஜ்யம் என்று அனில் அம்பானி மனம் உடைந்து சொன்னதும் உண்டு. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனங்களின் நிர்வாகத்தில் இருந்து முற்றிலும் விலகிக் கொண்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு அனில் அம்பானி 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் உலகின் 6வது பணக்காரராக இருந்தார். 16 ஆண்டுகளில் அவர் சந்தித்த இறக்கம் என்பது மிகவும் கொடுமையானது. இப்போது தன் தாயார் கோகிலா பென்னுடன் சேர்ந்து அனில் கோயில்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்போதும், தன்னால் தனது பிசினஸை மீட்டெடுக்க முடியுமென்று அவர் நம்புவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதை முறையான நிர்வகிக்கவில்லை என்றால் மோசத்தில்தான் முடியுமென்பதற்கு அனில் அம்பானி நல்ல உதாரணம் என்றே சொல்லாம்.
முற்றும்.
இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி சரிந்தது எப்படி?

Leave a Reply