,

65 ஆண்டு கால கிடப்பில் உள்ள ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் – முதல்வர் நிறைவேற்ற விவசாயிகள் ஏக்கம்

Aliyar
Spread the love

2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின், இவற்றில் 90 சதம் தற்போது, நிறைவேற்றி விட்டதாக திமுக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பொய்யான வாக்குறுதி களை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,தமிழகத்தில் விடியா ஆட்சியினை அளித்து வருவதாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும் பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளும்,திமுக அரசினை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
கோவை திருப்பூர் விவசாயி கள் பயனடையும் வகையில் தீட்டப்பட்ட ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறை வேற்றுவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த, நாள் முதலே, ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை பற்றிய அறிவிப்புக்கள் வராதது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக உள்ளது.
பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தினை உடனே நிறைவேற்றக்கோரி நேரிலும் மனு கொடுத்து உள்ளனர்.
அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சி பெறாத காலகட்டத்திலும்,இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாசன திட்டம் என்றும், பல வல்லுனர்களால் மகத்தான திட்டம் என்று போற்றப்பட்ட பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தில், கடந்த 65 ஆண்டு காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது ஆனைமலை ஆறு -நல்லாறு பாசன திட்டம்.
50 டிஎம்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் சுமார் 4.50 லட்சம் ஏக்கர் கோவை, திருப்பூர், ஈரோடு ஒரு சில பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் 50 டி எம் சி தண்ணீர் வரவை விவசாயிகள் எதிர்பார்த்து கடந்த 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம். ஆனைமலை குன்று பகுதிகளில் உற்பத்தி யாகும், தண்ணீர் மேற்கு நோக்கி பாய்ந்து நீராறு, சோலை ஆறு, பரம்பிக்குளம், ஆழியாறு, பெருவாரிப்பள்ளம் ஆகிய ஆறுகள் மூலம் ஆண்டுக்கு 30.50 டி எம் சி நீரை எதிர்பார்த்து, அவற்றை கிழக்கு புறமாக திருப்பி கோவை, திருப்பூர் மாவட்
டங்களில் பாசன வசதி பெறவும், மின் உற்பத்தி செய்யவும் தொடங்கப்பட்டது ஆனைமலை ஆறு திட்டம்.
ஆனைமலை ஆறு அணைத் திட்டத்தை நிறை வேற்றாததால் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 2.50 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை.
நல்லாறு திட்டம் தமிழக- கேரள இரு மாநில ஒப்பந்த படி,மேல் நீர் ஆறு தண்ணீர் முழுவதும் தமிழகத் திற்கு சொந்தம் என்பதால், அங்கிருந்து 14.40 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்து நல்லாறு பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைத்து ,காண்டூர் கால்வாயுடன் இணைக்கலாம் என வல்லுனர் குழுவினர் திட்டம் தீட்டினார். இதற்கு நல்லாறு அனைத்திட்டம் எனவும் பெயர் சூட்டப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் 4.50 லட்சம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் பயிர் செய்து உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம்.
விவசாயிகளும் மகிழ்ச்சியாக பயிரிடுவர்.கடந்த 65 ஆண்டு காலமாக திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே போடப் பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் கூடுதலாக 250 மெகாவாட் மின் உற்பத்தியும் கிடைக்கும்.
கேரளா அரசின் தாமத போக்காலும், தமிழக அரசின் முழு முயற்சி இல்லாத காரணத்தாலும் ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் விவசாய பெருங்குடி மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது.
விவசாயிகள் விருப்பம்
டெல்டா பாசன பகுதிகளில், கவனம் செலுத்தும், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், கொங்கு பகுதி விவசாயிகளான கோவை -திருப்பூர் மாவட்டங்களிலும் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என விவசாயி
கள் பெரிதும் விரும்புகின்றனர்.
கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 47 தேர்தல் வாக்குறுதிகளில், ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் பிரதான இடம் பெற்றுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கள் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பில், அரசின் துரித நடவடிக்கையால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளலூர் பாலம் சிங்காநல்லூர்-வெள்ளலூர் வழித்தடத்தில் ,நொய்யல் ஆறு உயர் மட்ட பாலம் கட்டப்
படும் என்ற தேர்தல் அறிக்கையில், குறிப்பிட்டவாறு பணிகள் தற்பொழுது வேகமாக நடைபெற்று வருகிறது. வ. உ. சி பூங்கா வளாகத்தில், வ.உ.சி.யின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு, தேர்தல் அறிக்கையில் உள்ளவாறு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
ஜவுளி பூங்கா மேலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட, அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா, பம்ப்செட் சோதனை ஆய்வகம், மினி பேருந்து இயக்க நடவடிக்கை, புதிய உயர் சிறப்பு மருத்துவமனை,நவீன வசதி கள் கொண்ட புதிய புறநகர் உருவாக்குதல், மேட்டுப்பாளையம்- சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம் புதிய ரயில் பாதை, கோவை மாநகரின் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் பறக்கும் சாலை திட்டம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கை அறிவிப்புகள், அறிவிப்புகளாகவே உள்ளன.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கோவை மாநகரின் உள்கட்டமைப்புகளை ஆளும் அரசு, விரைந்து ஏற்படுத்தினால் கோவை மாநகரம் அனைத்து துறைகளிலும் தன்னிகரற்று, தனிப்பெரும் நகரமாக விளங்கும்.