,

இந்திய மருத்துவமனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கேஎம்சிஹெச் கோவையின் நெ. 1

kmch
Spread the love

இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. தி வீக் -ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2023 என்ற இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான போட்டிகளுக்கிடையே இந்த விருதையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து பெற்றுவருவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

தி வீக் பத்திரிகை சார்பில் பெங்களூர் நகரில் நடைபெற்ற விழாவில் கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ஜே. சிவகுமரன் கோவையின் நெ. 1 பல்துறை மருத்துவமனை என்ற பெருமைமிகு விருதைப் பெற்றுக்கொண்டார்.

“தி வீக் பத்திரிகையின் இந்த ஆய்வானது மருத்துவத் துறையினர் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றது. எங்களது தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ சேவைக்கும், மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர்களின் திறமைக்கும் இந்த விருது ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. நகரில் நெ. 1 பல்துறை மருத்துவமனையாக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக விருது பெறுவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமாகும். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாக திகழ்வதையே இந்த விருது சுட்டிக் காட்டுகிறது” என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமாகிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.