,

​பாரதியார் பல்கலைக்கழக மகளிர் பேட்மிண்டன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

badminton
Spread the love

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் போட்டி,  பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
இப்போட்டியில் 50 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின.
இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணி, சசூரி கலை  அறிவியல் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 2-0 என்ற செட் கணக்கிலும், குமரகுரு பன்முகக் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும், 3-வது லீக் போட்டியில், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி அணியை 2-1 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
பல்கலைக்கழக அளவிலான பேட்மிண்டன் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணியினரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி பாராட்டினார்.
இதேபோல் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *