கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி 6 வது வார்டு தாந்தோன்றியம்மன் கோவில் வீதி மற்றும் பரம்சிவன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ:20.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜேந்திரன், குறிஞ்சிமலர் பழனிசாமி, வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம் , ரகுபதி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், இணைச் செயலாளர் சந்திரசேகரன் , மாவட்ட நிர்வாகிகள் மெளலி, செந்தில்குமார், பாபு, சாய் ஜெயந்தி , மேனகா மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் இருந்தனர்.
கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார்

Leave a Reply