,

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா

sri ramakrishna institute of technology
Spread the love

கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக முரளி நாகராஜ், பொது மேலாளர் – பராமரிப்பு, கம்மின்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட், புனே கலந்து கொண்டு 350 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கி தனது சிறப்புரையாற்றினார்.
எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று உரையாற்றினார்.
இவ்விழாவில் கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னதாக விழாவின் வரவேற்புரை கல்லூரி முதல்வர் முனைவர் ஜே.டேவிட் ரத்தினராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் (கல்வித்துறை) முனைவர் என் ஆர் அலமேலு மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.