,

ஆலங்காயம் அருகே மருந்து கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

college student
Spread the love

ஆலங்காயம் அருகே மருந்து கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி (60) இவர் இன்று நெஞ்சுவலி காரணமாக ஆலங்காயம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மருத்துவரை வரவழைத்து அவரை பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் கீழே விழுந்து உயிரிழந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரம்பரைப்பை ஏற்படுத்தியுள்ளது.